செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “மயக்கம் என்ன" படத்தின் சிறப்புக் காட்சியை ரஜினி பார்த்தார்.
மயக்கம் என்ன படம் இன்று ரிலீசானது. இப்படத்தை செல்வராகவன் இயக்கியுள்ளார். இதன் சிறப்பு காட்சி ரஜினிக்கு பிரத்யேகமாக ரியல் இமேஜ் அரங்கில் திரையிட்டு காட்டப்பட்டது.
வழக்கமாக செல்வராகவன் படம் ரிலீசுக்கு முன் சிறப்பு காட்சிகள் திரையிடுவது இல்லை. ஆனால் ரஜினிக்காக ஏற்பாடு செய்து இருந்தார்.
படம் ரஜினிக்கு மிகவும் பிடித்துப் போனதாம். இப்படத்தில் தனுஷ் 'ஓட ஓட ஓட தூரம் பாட பாட பாட பாட்டு முடியல…" என்ற பாடலை எழுதி பாடி உள்ளார். இப்பாட்டு ரஜினியை மிகவும் கவர்ந்து விட்டதாம். படம் முடிந்ததும் தனுசையும், செல்வராகவனையும் ரஜினி பாராட்டினார். தனுசுக்கு இப்படம் இன்னொரு மகுடம் என்று கூறி வாழ்த்தினார்.
0 comments:
Post a Comment