Wednesday, 7 March 2012

முனி 3 - 'பேய் உற்சாக'த்தில் லாரன்ஸ்!

Lawrence and Lakshmi Rai


முனி - 2 எனும் காஞ்சனா கண்ட பெரும் வெற்றி, இயக்குநர் - நடிகர் ராகவா லாரன்ஸுக்கு 'பேய் உற்சாக'த்தைத் தந்திருக்கிறது.

சுறுசுறுப்பாக அடுத்த பாகத்துக்குத் தயாராகிவிட்டார் மனிதர்.

இந்த புதிய படத்தில் தனது தம்பியை அறிமுகப்படுத்தப் போகிறாராம் லாரன்ஸ். ராசியான நடிகை என்பதால், மனஸ்தாபத்தை மறந்து மீண்டும் லட்சுமிராயை கேட்க முடிவு செய்துள்ளாராம். படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடவிருக்கிறார்.

முனி 3 குறித்து லாரன்ஸ் கூறுகையில், "காஞ்சனா மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது ராகவேந்திரர் அருளாள்தான். ராகவேந்திரர் கோயிலைக் கட்டிய பிறகு என் வாழ்க்கை நல்ல விதமாக போய்க்கொண்டிருக்கிறது. என் வெற்றிகளை ராகவேந்திரருக்கு அர்ப்பணிக்கிறேன்," என்றார்.

காஞ்சனாவை இந்தியில் சல்மான்கான் ரீமேக்கவிருப்பது தெரியும்தானே!

0 comments:

Post a Comment

 
Related Posts Plugin for WordPress, Blogger...