Wednesday, 7 March 2012

காலர் வைக்காத டி சர்ட்: கார்த்தியை உள்ளேவிட மறுத்த ஜிம்கானா க்ளப்!

Karthi


காலர் வைக்காத டி சர்ட் போட்டு வந்த 'குற்றத்துக்காக' நடிகர் கார்த்தியை வெளியிலேயே அரைமணி நேரம் நிறுத்தி வைத்தனர் ஜிம்கானா க்ளப் நிர்வாகிகள். அவர் காலர் வைத்த வேறு சட்டை போட்ட பிறகே உள்ளே அனுமதித்தனர்.

இதேபோல, சின்னதாக காலர் வைத்த ஒரு சட்டையைப் போட்டு வந்ததால், கமலா தியேட்டர் அதிபர் விஎன் சிதம்பரமும் வெளியில் நிறுத்தப்பட்டார். 

சென்னையில் உள்ளது ஜிம்கானா க்ளப். இங்கு நேற்று ஒரு பிரஸ் மீட் நடந்தது. சென்னை-காஞ்சிபுரம்-திருவள்ளூர் சினிமா தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஆரம்பிப்பது குறித்த பிரஸ் மீட் அது.

ஆனால் இதில் ஏக குழப்பங்கள், பஞ்சாயத்துகள். அங்கீகாரமில்லாத சில நபர் ஏற்பாடு செய்த பிரஸ் மீட் என்பதால் யாரும் போக வேண்டாம் என்று முதலில் பிஆர்ஓ யூனியன் சொல்லிக் கொண்டிருந்தது. அப்புறம் பஞ்சாயத்து நடந்து, ஒருவழியாக நிகழ்ச்சி மாலை நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர் நடிகர் கார்த்து. விழாவில் கமலா தியேட்டர் அதிபர் சிதம்பரமும் வந்திருந்தார்.

அந்த கிளப்பின் 'டிரஸ் கோட்'படி, டி சர்ட், காலர் வைக்காத டி சர்ட் போட்டு உள்ளே வரக்கூடாதாம்.

ஆனால் கார்த்தியோ காலர் வைக்காத டிசர்ட் போட்டு வந்துவிட்டார். உள்ளே விட மறுத்துவிட்டனர் க்ளப் நிர்வாகத்தினர். அரைமணி நேரம் அவர் வெளியில் காத்திருந்தார். பின்னர் உதவியாளர் மூலம் வேறு சட்டை ஏற்பாடு செய்து போட்டுக் கொண்டு வந்தார்.

அடுத்து வந்த கமலா தியேட்டர் அதிபர் விஎன் சிதம்பரம் வழக்கமாக அணியும் சின்ன காலர் வைத்த வெள்ளைச் சட்டை அணிந்து வந்தார். அவரது ட்ரஸ் கோட் அதுதான்!

அவரையும் உள்ளே விட மறுத்துவிட்டார்கள். அவர் எவ்ழவளவோ சொல்லிப் பார்த்தும் அனுமதிக்காததால் தன் ட்ரைவர் சட்டையை வாங்கிப் போட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தார்.

இந்த ட்ரஸ் கோடெல்லாம் இங்கு வழக்கமாக வரும் உறுப்பினரோடு நிறுத்திக் கொள்ளலாமே... நிகழ்ச்சிக்கு வருகிற விருந்தினர்களிடம் எதிர்ப்பார்ப்பது சின்னப் புள்ளத்தனமால்லையா என்று நிருபர்களுக்கு, ஒரு இரும்புத்தனமான சிரிப்பை மட்டும் பதிலாகத் தந்தனர் க்ளப் நிர்வாகத்தினர்.

0 comments:

Post a Comment

 
Related Posts Plugin for WordPress, Blogger...