Facebook Tricks

1)How to Send Free SMS via Facebook
2)How to Send Profile Pics in Facebook Chat
3)How To Download Facebook or Youtube Videos Without Any Tools
etc...

Computer Tricks

1)Computer Maintenance tips for keeping it healthy
2)Top 20 Tips To Keep Your System Faster
3)Increase your RAM by Increasing system speed
etc...

Mobile Tricks

1)15 General Tips and Tricks for Nokia Users
2)Save your Battery Charge
3)Play all file format in your mobile using core player
etc...

2012 Antivirus Softwares

1)Full Version Panda Internet Security 2012 with Serial Key
2)Download Bitdefender Total Security 2012 Beta
3)Download Avast 6 Home Edition 1 Year License Serial Key
etc...

Firefox Tricks

1)Top 10 Firefox Hacks and Tricks
2)Best Funny Firefox Tricks
3)Ultimate List Of Firefox 4 Tips; Tricks And Hacks You Should Learn Right Now
etc...

Showing posts with label Vijay News. Show all posts
Showing posts with label Vijay News. Show all posts

Friday, 16 December 2011

விஜய்யுடன் இணையும் விஜய்!!



இன்றைய தேதிக்கு தமிழ் சினிமாவில் இரண்டு விஜய்கள் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். முன்னவர் நடிகர். முன்வரிசை நாயகர்களுள் ஒருவர் (அவ்வப்போது சறுக்கினாலும்). பின்னவர் திறமையான இயக்குநர் (ஹாலிவுட் படங்களை கொஞ்சம் ஜெராக்ஸ் எடுத்தாலும்!)

இந்த இருவரும் அடுத்து ஒரு படத்துக்காக இணையப் போகிறார்கள்.

பிரபல பைனான்ஸியரான சந்திரபிரகாஷ் ஜெயின் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பவர் ஜிவி பிரகாஷ் குமார் (பெரும்பாலும் அந்நிய இசைக்கலைஞர்களின் ஆல்பங்களே இவருக்கு துணை!). நடிகர் விஜய் படத்துக்கு இவர் முதல்முறையாக இசையமைக்கிறாராம். அந்த உற்சாகத்தில் படம் குறித்த தகவல்களை ட்விட்டரில் கொட்டியுள்ளார்!

ஏ ஆர் முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு இந்தப் புதிய படத்துக்கு நடிகர் விஜய் தேதிகள் கொடுப்பார் என்கிறார்கள்.

ஆனால் இடையில் கவுதம் மேனனின் 'யோஹன்' படத்துக்கும் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் விஜய். சீமானுக்கு வேறு வாக்கு கொடுத்து கிட்டத்தட்ட ஏமாற்றியுள்ள நிலையில், இந்தப் புதிய படத்துக்கு கமிட் ஆகியுள்ளார் விஜய்!

விஜய் படமென்றால், அறிவிப்பு வந்த பிறகும் கூட ஒன்றும் உறுதியாக சொல்ல முடியாது போலிருக்கிறதே!

சரீ.... ஜோடி யாரு... அமலா பாலா?!

விஜய்யுடன் கை கோர்க்கும் ரஜினி படத் தயாரிப்பாளர்!



விஜய் நடிக்க, கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் பிரமாண்ட படம் யோஹன் - அத்தியாயம் ஒன்று.

இந்தப் படத்தை முதலில் கவுதம் மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் ஈராஸ் இன்டர்நேஷனல் கவுதம் மேனனுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறது. 

இதனை அதிகாரப்பூர்வமாக ஈராஸ் இன்று அறிவித்துள்ளது. "பிராந்திய மொழி சினிமாவில் தீவிர கவனம் செலுத்தும் முடிவில் உள்ள ஈராஸ், அதன் ஒரு பகுதியாக போட்டோன் கதாஸ் நிறுவனத்துடன் இணைந்து விஜய்யின் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது," என்று ஈராஸ் நிறுவனத்தின் சுனில் லுல்லா தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ரஜினி நடிக்கும் கோச்சடையான், ராணா ஆகிய படங்களையும், ஷங்கர் இயக்கவிருக்கும் படத்தையும் ஈராஸ்தான் தயாரிக்கிறது. 

முதல் முறையாக இப்போது விஜய் நடிக்கும் படத்தை இந்த நிறுவனம் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் படத்துக்கு தலைப்பு 'துப்பாக்கி'... ஏ ஆர் முருகதாஸ் சம்பளம் ரூ12 கோடி!



ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு 'துப்பாக்கி' என பெயர் சூட்டியுள்ளனர்.

இந்தப் படத்தில் ஏ ஆர் முருகதாஸுக்கு சம்பளமாக ரூ 12 கோடி பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை ஆரம்பத்தில் எஸ்ஏ சந்திரசேகரனும் ஜெமினி பிலிம்ஸும் தயாரிக்கவிருந்தனர். அப்போதே ஏ ஆர் முருகதாஸ் சம்பளம் ரூ 12 கோடி என முடிவு செய்யப்பட்டதாம். ஆனால் பின்னர் இந்த சம்பளம் அதிகம் என்று தயாரிப்பு தரப்பில் யோசித்ததால், இழுபறி நீடித்துள்ளது.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பு கலைப்புலி தாணுவுக்கு கைமாறியதால், முருகதாஸ் சம்பளத்துக்கு பிரச்சினை இல்லாமல் போனது. விஜய்க்கு எவ்வளவு சம்பளம் என்ற விவரம் வெளியாகவில்லை.

படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 65 கோடி என்கிறார்கள். விஜய் படத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் இதுவே முதல்முறை. இந்த அளவுக்கு அவரது படம் பிஸினஸ் ஆகுமா என்ற கேள்வி இருப்பதால், விநியோகஸ்தர்கள் மலைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

காஜல் அகர்வால் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். விரைவில் துப்பாக்கி படப்பிடிப்பு தொடங்குகிறது.

வேலாயுதம் வெள்ளி விழா காண மொட்டை போட்ட விஜய் ரசிகர்கள்!



விஜய் நடித்த வேலாயுதம் வெள்ளி விழா காண அவரது ரசிகர்களும் ரசிகைகளும் நேற்று மொட்டை போட்டுக் கொண்டு வடபழனியில் ஊர்வலம் போனார்கள்.

தீபாவளிக்கு வெளியான வேலாயுதம் படம், கூடுதல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டு வருவதாக விஜய் தரப்பில் கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் வெற்றியை பார்ட்டி கொடுத்து கொண்டாடி வருகிறார் விஜய். இந்த நிலையில், அவரது ரசிகர்களோ இந்தப் படம் வெள்ளி விழா கொண்டாட மொட்டை போட்டு, ஊர்வலம் போகத் தொடங்கியுள்ளனர்.

சென்னை வட பழனி முருகன் கோயிலில் மொட்டை போட்டுக் கொண்ட இந்த ரசிக ரசிகைகள், அங்கிருந்து கமலா திரையரங்கம் வரை ஆட்டம் பாட்டம் என ஊர்வலமாக நடந்து வந்தனர்.

இந்த மொட்டைக்கு இன்னொரு பின்னணியும் உள்ளது. வழக்கமாக விஜய் படம் வெளியாகும் அரங்கம் கமலா. ஆனால் தீபாவளிக்கு இங்கு வெளியான படம் ஏழாம் அறிவு. இப்போது, வேலாயுதத்தை கூடுதலாக வெளியிட்டுள்ளது அந்த அரங்கம். அதைக் கொண்டாடவs இப்படி ஊர்வலம் போனார்களாம்!

23-ம் தேதி கோவையில் 'நண்பன்' இசை.. வருகிறார் அமீர்கான்?



ஷங்கர் இயக்கத்தில் விஜய் - ஜீவா - ஸ்ரீகாந்த் நடித்துள்ள நண்பன் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 23-ம் தேதி கோவையில் நடக்கிறது.

கோவையில் நடக்கும் முதல் பிரமாண்ட சினிமா இசை வெளியீட்டு விழா இதுவே. 

இந்த விழாவுக்கு நண்பன் படத்தின் ஒரிஜினல் கதையான 3 இடியட்ஸின் நாயகன் அமீர்கான் வருவார் என்று கூறப்படுகிறது.

ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்துள்ள நண்பன் பொங்கல் ஸ்பெஷலாக களமிறங்குகிறது. 

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏழாம் அறிவில் சொதப்பிவிட்டதால், இந்தப் படத்துக்கு மிக கவனத்துடன் அவர் இசையமைத்திருப்பார் என ரசிகர்கள் நம்புகிறார்கள். 

இந்தப் படப் பாடல்களை மேடையில் நேரடியாக தனது குழுவினரை வைத்து வழங்க ஹாரிஸ் ஜெயராஜ் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. 

கோவை இந்துஸ்தான் கல்லூரியில் மிகப் பிரமாண்டமாக இந்த விழா நடக்கிறது. 

3 இடியட்ஸ் படத்தின் ஹீரோ அமீர் கான் இந்த விழாவுக்கு வருவார் என கடந்த சில தினங்களாக செய்தி பரவி வருகிறது. வருவாரா என்பதை படத்தின் இயக்குநரோ தயாரிப்பாளரோ உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 
Related Posts Plugin for WordPress, Blogger...