நடப்பு ஐ.பி.எல்.5வது தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதிப் போட்டியில் இடம்பிடித்துவிட்டது. ஐ.பி.எல். போட்டிகளில் முதல் முறையாக கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்குள் இறங்கியிருக்கிறது. இருப்பினும் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருந்ததால் கொல்கத்தாவிடம் தோற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு இன்று சென்னையுடன் மோதும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2 ஆண்டுகளாக ஐ,பி.எல். போட்டிகளின் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்புத் தொடரில் அடுத்த சுற்றுக்கே தகுதி பெறுமா? என்ற தடுமாற்றத்தில் இருந்தது. ஒருவழியாக ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோற்றதால் இறுதிப் போடிக்கான முதல் தகுதிச் சுற்றில் விளையாடி வெற்றியும் பெற்றுள்ளது.
வழக்கம்போல சென்னை சூப்பர்கிங்ஸ் அணி ஏனோதானோ என அணி ஆடுமோ என்ற சந்தேகத்தை கேப்டன் டோனி கடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் தீர்த்து வைத்தார். தமது அபார ஆட்டத்தை முதல் முறையாக டோனி வெளிப்படுத்தியிருந்தாலும் சொதப்பல் மன்னர்கள் நிறையப் பேர் உள்ள அணியாக சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இருந்து வருகிறது.
ஆடுகளத்தில் ஆட்டத்தைப் பொறுத்துதான் வெற்றி தோல்வி இருக்க வேண்டுமே தவிர அதிர்ஷ்டத்தை மட்டுமே டோனி முழுமையாக நம்பி வருவது எப்போதும் அது கை கொடுத்துவிட்டாது.
உள்ளூர் மைதானம் என்பதால் சென்னைக்கு சாதகமாக இருக்கலாம். ஆனாலும் கூட ஒருங்கிணைந்து ஒவ்வொருவரும் நன்றாக ஆடினால் மட்டுமே கோப்பையை வெல்லும் இறுதிப் போட்டிக்குள் சென்னை சூப்பர்கிங்ஸ்போக முடியும்.
சென்னையுடன் மோதும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் சேவாக், வார்னர் என்ற இரண்டு ஜாம்பவனாகள்தான் நம்பிக்கை நட்சத்திரங்கள். மிடிலில் ஆடக் கூடிய டெய்லர், ஜெயவர்த்தனே, ஓஜா ஆகியோரும் தங்களது முழுத் திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பர். மோர்னே மோர்கல், உமேஷ், இர்பான் ஆகியோரது பந்துவீச்சும் டெல்லிக்கு கை கொடுக்கலாம்.
சமபலம் கொண்ட டெல்லி டேர்டெவ்லிஸ் அணியும் சென்னை சூப்பர்கிங்ஸும் மோதுவதால் ஆட்டத்தில் அனல்பறக்கும் எனலாம்.
0 comments:
Post a Comment