அவரது ஆறாம் அறிவு சொல்லுவது என்னவெனில், மே 27-ந் தேதி நடைபெற உள்ள ஐ.பி.எல்.5வது தொடரின் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிதான் கோப்பையை வெல்லும் என்கிறதாம்.
அதுமட்டுமின்றி கங்குலியின் ஆறாவது அறிவின் வெளிப்பாட்டுப் படி, அனேகமாக சென்னை சூப்பர்கிங்ஸ் அணியோடு இறுதிப் போட்டியில் மோதுவதை கொல்கத்தா தவிர்க்குமாம்..அதாவது சென்னை சூப்பர்கிங்ஸ் தேறாதாம்.. இந்த முறை வலுவான ஒரு நல்ல அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர்கொள்ளுமாம்.
அடுத்த ஆண்டு புனேக்குத்தான் கப்
கங்குலியின் ஆறாவது அறிவு சொல்லியிருக்கும் ஒரு தத்துவத்தை நிச்சயம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது கிரிக்கெட் என்பது ஒரு வட்டம் மாதிரி...இந்த முறை ஒரு அணி ஜெயிச்சா அடுத்த ஆண்டு இன்னொரு ஜெயிக்குமாம்.. அடுத்த ஆண்டு நிச்சயம் புனேவாரியர்ஸ்தான் கோப்பையைக் கைப்பற்றும் என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார் கங்குலி.
கொல்கத்தா அணியில் நரீன் இருக்கிறவரைதான் அந்த அணி ஜெயிக்க முடியும்..இல்லையெனில் சொதப்பல்தான் என்றும் சொல்லுகிறார்..
கிரிக்கெட் உலகத்திலிருந்து விடைபெற்று விட்டாலும் "ஆறாம் அறிவு" ஆரூடகர்த்தா கங்குலிக்கு நல்ல தொழில் கைவசம் இருக்கிறது போல..
0 comments:
Post a Comment