Wednesday, 7 March 2012

ஏப்ரல் 14-ல் சகுனி!

sakuni Movie 

ஏப்ரல் 14-ம் தேதியை என்னவென்று கொண்டாடுவதென்று தமிழர்கள் குழப்பத்திலிருந்தாலும், ஏதோ ஒரு விசேஷ தினமாக கொண்டாடிவிட்டுப் போகட்டும், நம்ம வியாபாரத்தைப் பார்க்கலாம் என்ற நினைப்பில் புதுப்படங்களை ரிலீஸ் செய்யும் வேலையில் மும்முரமாகியுள்ளனர் தமிழ் சினிமாக்காரர்கள்.

அவர்களைப் பொறுத்தவரை அய்யா ஆட்சியிலிருந்தால் ஏப்ரல் 14 சித்திரை திருநாள். அம்மா வந்துவிட்டால் தமிழ்ப் புத்தாண்டு என்பதில் தெளிவாக உள்ளனர்!

இந்த சித்திரை முதல் தினத்தில் வெளியாகும் படங்களில் முந்திக் கொண்டுள்ளது கார்த்தி நடிக்கும் சகுனி.

இந்தப் படத்தில் கார்த்தி அரசியல்வாதியாக நடித்துள்ளார். கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து, அரசியல் ஆட்டத்தில் எப்படியெல்லாம் விளையாடுகிறார், எத்தனை பேர் வாழ்க்கையை மாற்றுகிறார் என்பதுதான் கதை.

கார்த்திக்கு இந்தப் படத்தில் ஜோடி பரணிதா. ஆனால் உண்மையான ஜோடி சந்தானம் எனும் அளவுக்கு காமெடியில் பின்னிப் பெடலெடுத்துள்ளார்களாம்.

ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது. மார்ச்சில் பாடல் வெளியீடு, ஏப்ரல் 14-ல் பட வெளியீடு என பக்கா திட்டமிடலுடன் படத்தைத் தயார் செய்துள்ளார் இயக்குநர் சங்கர் தயாள்.

0 comments:

Post a Comment

 
Related Posts Plugin for WordPress, Blogger...