டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தின் மூலம் சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் முரளி விஜய் அதிவேகமாக சமதடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டி பற்றிய துளிகள்..
- ஐ.பி.எல்.5வது தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி தொடர்ந்து 2-வது தோல்வியை நேற்று சந்தித்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. சென்னை சூப்பர்கிங்ஸ் அணியிடம் 86 ரன்கள் வித்தியாசத்தில் நேற்று தோல்வியை சந்தித்தது.
- ஐ.பி.எல்.5வது தொடரில் நேற்றைய போட்டியின் மூலம் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் 300 ரன்களை எட்டிய 3வது வீரரானார் மஹளா ஜெயவர்த்தன. அந்த அணியில் சேவாக் மற்றும் பீட்டர்சன் ஆகியோரும் 300 ரன்களை எட்டியுள்ளனர்.
- நடப்பு ஐ.பி.எல்.5வது அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற பெருமை சென்னை சூப்பர்கிங்ஸூக்கு நேற்றைய போட்டியின் மூலம் கிடைத்திருக்கிறது.
- ஐ.பி.எல்.5வது தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக கெய்லை அடுத்து முரளி விஜய்தான் சதமடித்திருக்கிறார். டெல்லிக்கு எதிராக கெய்ல் 128 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். நேற்றைய போட்டியில் 113 ரன்கள் எடுத்திருந்தார் முரளி விஜய்.
- நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றதன் மூலம் ஐ.பி.எல்.போட்டிகளில் 5-வது முறையாக அவர் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றிருக்கிறார்.
- ரோஸ் டெய்லரின் பந்தை கேட்ச் பிடித்ததன் மூலம் சுரேய் ரெய்னா ஐ.பி.எல். போட்டிகளில் 42 கேட்சுகளைப் பிடித்திருக்கிறார்.
- சென்னை அணி எடுத்த 222 ரன்களே இந்த ஐபிஎல் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் எடுத்த 215 ரன்களே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
- விஜய் நேற்று அடித்த சதமே அதிகவேக சதமாகும். 51 பந்துகளில் 4 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் அவர் சதம் கண்டார். முன்னதாக ரோஹித் சர்மா, டேவிட் வார்னர் (52 பந்துகளில்) அடித்த சதங்களே அதிவேக சதமாக இருந்தது.
- நடப்பு ஐ.பி.எல். போட்டியில் 12 ஆட்டங்களில் விளையாடிய விஜய், அரைசதம்கூட அடிக்கவில்லை. ஆனால் தனது 13-வது ஆட்டத்தில் சதமடித்து சென்னைக்கு அபார வெற்றியைப் பெற்றுதந்துள்ளார். நடப்பு ஐபிஎல் போட்டியில் அடிக்கப்பட்ட 6-வது சதம் இது. மேலும் நடப்புத் தொடரில் தனி ஒரு வீரர் அடித்த 2-வது அதிகபட்ச ஸ்கோரும் இதுதான்.
- ஐபிஎல் போட்டிகளில் விஜய் அடித்த 2-வது சதம் இது. இரு சதம் அடித்த ஒரே இந்திய வீரரும் அவர்தான்.
0 comments:
Post a Comment