மோர்ன் மோர்கல் மொத்தம் 25 விக்கெட்டுகளை எடுத்தவர். நடப்பு தொடரில் நல்ல பெளலர்களில் ஒருவர். அவரை வேண்டாமென சேவாக் சட்டென முடிவெடுத்திருந்தாலும் அதன் பலனை நன்றாகவே அனுபவித்துவிட்டார்.
சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மோர்கலை கைவிட்டது மட்டுமில்லாமல் பீல்டிங்கை தேர்வு செய்ததும் கூட தவறான முடிவு என்றே விமர்சிக்கப்படுகிறது. இதே தவறைத்தான் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்பஜன்சிங்கும் செய்திருந்தார் என்கின்றனர்.
இதுபோன்ற முக்கிய போட்டிகளில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ரன்களைக் குவித்துவிட்டு எதிரணியை சேசிங் செய்யவிட்டால்தான் சரியாக இருக்கும். ஆனால் இரண்டு போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸை பேட்டிங் செய்யவிட்டதால் அந்த அணி தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டது.
இது பற்றி கருத்து தெரிவித்த சேவாக், இர்பான் பதானுக்கு எதிர்பாராதவிதமாக காயம் ஏற்பட்டது. அதனால் சில மாறுதல்களை செய்தோம்.. அதனால் ரஸ்ஸெல்லை இறக்கினோம்.. மோர்கல் இல்லாதது ரொம்ப வருத்தம்தான் என்றார்.
இதேபோல் குப்தாவை பந்துவீச விட்டாலும் விட்டார் சேவாக்... இதுவரை ஒழுங்காக ஆடாத முரளி விஜய்க்கு நல்ல அடித்தளம் போட கை கொடுத்துவிட்டார். டெல்லி அணியைப் பொறுத்தவரை சேவாக், வார்னர் இருவர் தான் நம்பிக்கைக்குரிய பேட்ஸ்மேன்கள். இருவருமே சொற்ப ரன்களில் சொதப்பிவிட்டுப் போனதால் பேட்டிங்கிலும் வீழ்ந்து படுதோல்வியைச் சந்திக்க நேர்ந்தது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன்களில் சிறு சிறு கணிப்புகள் எல்லாமே சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு கை கொடுத்திருக்கிறது என்பதே உண்மை.
0 comments:
Post a Comment