டெல்லி: தென் ஆப்பிரிக்காவில் டுவென்டி20 போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் அனுபவ வீரர் சச்சினுக்கு பதிலாக அதிரடி வீரர் ராபின் உத்தப்பா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் குடியேறி 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவு கூறும் வகையில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் பங்கேற்கும் டுவென்டி20 கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பார்க்கில் நடைபெற உள்ள இப்போட்டிக்கான இந்தியா அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக கர்நாடகா பேட்ஸ்மேன் ராபின் உத்தப்பா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இளம் வீரர் விராத் கோஹ்லி துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும் டுவென்டி20 போட்டியிலும் அதே பதவியை வகிப்பார். கேப்டனாக வழக்கம் போல டோணி செயல்படுவார்.
வரும் 30ம் தேதி நடைபெற போட்டியில் கலந்து கொள்ள வரும் 28ம் தேதி இந்திய அணியினர் ஜோகனஸ்பார்க் புறப்பட்டு செல்ல உள்ளனர்.
இந்திய அணியின் விபரம்:
டோணி (கேப்டன்), விராத் கோஹ்லி (துணை கேப்டன்), ராபின் உத்தப்பா, கெளதம் கம்பிர், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ரவிந்திர ஜடேஜா, அஸ்வின், பிரவீன் குமார், வினய் குமார், ராகுல் சர்மா, யூசப் பதான், இர்பான் பதான், மனோஜ் திவாரி, அசோக் தின்டா.

0 comments:
Post a Comment