Wednesday, 7 March 2012

ஐபிஎல் 5வது சீசன்: ராஜஸ்தானுக்கு புதிய சீருடை, டெல்லிக்கு புதிய பாட்டு அறிமுகம்

Royals unveiled team's new jersey


மும்பை: 5வது ஐபிஎல் டுவென்டி20 தொடரில் பங்கேற்க உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல டெல்லி டேர்டேவில்ஸ் அணியினர் புதிய தீம் பாடலை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

ஐபிஎல் டுவென்டி20 கிரிகெட் தொடரின் 5வது சீசன் அடுத்த மாதம் (ஏப்ரல்) 4ம் தேதி சென்னையில் துவங்குகின்றது. சென்னை, மும்பை, ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட அணிகள் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளன.

இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினரின் சீருடை புது பொலிவு பெற்றுள்ளது. பழைய நீல நிற சீருடை மாற்றப்பட்டு, இந்த ஆண்டு பழுப்பு நிறத்தலான சீருடை அளிக்கப்பட்டுள்ளது. இதில் வீரர்களின் டி-சர்ட்டில் ராஜஸ்தான் அணியின் விளம்பர நிறுவனமான அல்டரா டெக் நிறுவனத்தின் சின்னம் (லோகோ) அச்சிடப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் அணியின் புதிய சீருடை அறிமுக விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் அணியின் உரிமையாளர்களான நடிகை ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்தரா, அணியின் கேப்டன் ராகுல் டிராவிட், வீரர் ஸ்ரீசாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர். நடிகை ஷில்பா ஷெட்டி அணியின் புதிய சீருடையை அறிமுகப்படுத்தினார்.

அதன்பிறகு அவர் கூறியதாவது,

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விளம்பரதாரராக அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம் இருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. விளம்பரதாரர் மற்றும் புதிய கேப்டன் ராகுல் டிராவிட் ஆகியோர் இணைந்து செயல்பட்டு அணிக்கு புதுமையை அளித்தனர். அதன்மூலம் அணியின் ரசிகர்களை இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மகிழ்விக்க முடியும் என்று நம்புகின்றேன் என்றார்.

டெல்லிக்கு புதிய பாட்டு:

அதேபோல டெல்லி டேர்டெவில்ஸ் அணியினர் வீரர்கள் மற்றும் ரசிகர்களை கவரும் வகையில் புதிய அணி பாடல் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியினர் வீரர்கள் மற்றும் ரசிகர்களை கவரும் வகையில் 'முண்தே டில்லி கே' என்ற அணி பாடல் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இப்பாடலை மிச்சு பட்டேல், அர்ஜித் தத்தா ஆகியோர் இயற்றி உள்ளனர். பாடலை ஜஸ்பிரித் ஜாஸ் பாடியுள்ளார்.
  Read:  In English 
இப்பாடலை குறித்து டெல்லி அணியின் உரிமையாளரான ஜி.எம்.ஸ்டோர்ட்ஸ் நிறுவன தலைவர் (விற்பனை பிரிவு) ஹிமந்த் துவா கூறியதாவது,

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் ரசிகர்களை திரட்டி, அணியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லும் சக்தி, இப்பாடலுக்கு உள்ளது என்றார்.

டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாட்டும் மாறுமா அல்லது அதே விசில் போடுதானா என்பது தெரியவில்லை...

0 comments:

Post a Comment

 
Related Posts Plugin for WordPress, Blogger...