Wednesday 7 March 2012

டுவென்டி20 போட்டி: தென் ஆப்பிரிக்கா செல்கிறது இந்திய அணி- சச்சின் ஆடுவது சந்தேகம்!

Kallis


ஜேகனஸ்பெர்க்: தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் குடியேறி 150 ஆண்டுகள் நிறைவு பெற்றதை நினைவு கூறும் வகையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் பங்கேற்கும் டுவென்டி20 கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் வரும் 30ம் தேதி நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலியாவில் தோல்வியுடன் திரும்பிய இந்திய அணி வரும் 11ம் தேதி முதல் பங்காளதேஷில் நடைபெறும் ஆசியக் கோப்பையில் பங்கேற்க உள்ளது. ஆசியக் கோப்பை வரும் 22ம் தேதியுடன் முடிவடைகின்றது. அதன்பிறகு அடுத்த மாதம் (ஏப்ரல்) 2ம் தேதி முதல் 5வது ஐபிஎல் தொடர் துவங்குகின்றது.

அதேபோல தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 27ம் தேதியுடன் முடிவடைகின்றது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் குடியேறி 150 ஆண்டுகள் கடந்ததை கொண்டாடும் வகையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே டுவென்டி20 போட்டி ஒன்றை நடத்த முடிவு செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் ஏற்றது போல வரும் 30ம் தேதி ஜோகன்ஸ்பார்க்கில் இப்போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதம் அளித்துள்ளது.

இப்போட்டியின் போது தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் காலீஸை கெளரவிக்க, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து தென் ஆப்பிரிக்க வீரர் காலிஸ் கூறியதாவது, கிரிக்கெட்டில் எனது கனவை நிறைவேற்ற தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் எனக்கு சிறந்த வாய்ப்பை அளித்துள்ளது. இதனை மகிழ்ச்சி உடன் வரவேற்கின்றேன்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எனது தந்தை குறைந்த வயதிலேயே இறந்தார். அதேபோல இந்திய வீரர் யுவராஜ் சிங்கும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். யுவராஜ் சிங் அறக்கட்டளைக்கு தனிப்பட்ட முறையில் நிதியுதவி அளிக்க திட்டமிட்டுள்ளேன் என்றார்.

வரும் 30ம் தேதி நடைபெற போட்டியில் கலந்து கொள்ள வரும் 28ம் தேதி இந்திய அணியினர் ஜோகனஸ்பார்க் செல்ல உள்ளனர். இப்போட்டியில் பங்கேற்க செல்லும் இந்திய அணியில் சச்சினுக்கு பதிலாக ராபின் உத்தப்பா சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

0 comments:

Post a Comment

 
Related Posts Plugin for WordPress, Blogger...