மும்பை: ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் இளம்வீரர் விராத் கோஹ்லி துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதால், கெளதம் கம்பிர் போன்ற மூத்த வீரர்கள் வருத்தப்பட கூடாது என்று முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் வரும் 11ம் தேதி துவங்க உள்ள ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதில் துணை கேப்டனாக டெல்லி வீரர் விராத் கோஹ்லி நியமிக்கப்பட்டார்.
இந்திய அணியில் இளம்வீரர் விராத் கோஹ்லி துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டது, மூத்த வீரர்களுக்கு வருத்தம் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இந்த நிலையில் கெளதம் கம்பிர் போன்ற அணியின் மூத்த வீரர்கள், துணை கேப்டனாக நியமிக்கப்படாதது குறித்து வருத்தப்பட கூடாது என்று முன்னாள் இந்திய வீரர் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விராத் கோஹ்லி சிறப்பாக விளையாடினார். அதற்காக இந்திய அணி தேர்வுக் குழுவினர் அவருக்கு சிறிய அளவிலான மதிப்பை வழங்கி உள்ளனர்.
விராத் கோஹ்லி தனது விளையாட்டு திறமையை முதல் முறையாக நிரூபித்து காட்டியுள்ளார். ஆனால் அவர் இன்னும் பல படிகளை கடக்க வேண்டியுள்ளது. துணை கேப்டனாக நியமிக்கப்பட்டவர்கள் எல்லாரும் அடுத்தப்படியாக கேப்டனாக நியமிக்கப்படுவதில்லை என்பது அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கின்றேன்.
இதனை கண்டு கம்பிர் போன்ற மூத்த வீரர்கள், தாங்கள் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டதாக நினைக்க கூடாது. தற்போது கேப்டன் டோணி சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அது போன்ற எண்ணம் கொள்ள தேவையில்லை என்றார்.

0 comments:
Post a Comment